கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவம் வெளியீடு!
Saturday, February 24th, 2018
கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவ விநியோகம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை நாடு முழுவதும் அமைந்துள்ள 18 மத்தியநிலையங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இம்முறை பரீட்சை உற்பத்தி மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளில் இடம்பெறவுள்ளது. இதனுடன் கொரிய மொழி திறன் பரீட்சை, கணனி ஊடாகவே இடம்பெறவுள்ளது.
மேலும் மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரை நிர்மாணத்துறைக்கான பரீட்சையும், மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரை உற்பத்தி துறைக்கான பரீட்சையும் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
Related posts:
இந்திய மற்றும் வெளிமாவட்ட மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளால் முல்லைத்தீவு மாவட்டகடற்றொழிலாளர்கள் பாதி...
வடக்கு, கிழக்கில் 6 நீதிபதிகளுக்கு இடமாற்றம்!
நாட்டில் வருடாந்தம் 100 தொன் பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுகின்றன - சுற்றா...
|
|
|


