நாட்டில் வருடாந்தம் 100 தொன் பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுகின்றன – சுற்றாடல் அமைச்சு சுட்டிக்காட்டு!

Monday, July 26th, 2021

இலங்கையில் வருடாந்தம் 96 – 100 தொன் வரையான பிளாஸ்டிக் யோகட் வெற்றுக் கோப்பைகள் சுற்றாடலில் வீசப்படுவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

யோகட் கோப்பைகளை மீள் சுழற்சி செய்வது தொடர்பில் சுற்றாடல் அமைச்சரான மஹிந்த அமரவீர மற்றும் பல்வேறு நிறுவனங்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்படி விடயமானது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவனைக்கு உட்பட்ட யோகட் கோப்பைகளில் 7 வீதம் மாத்திரமே மீள் சுழற்சிக்காக பெற்றுக் கொள்ளப்படுவதுடன் ஏனைய 93 வீதமானவை சூழலில் கொட்டப்படுவதுடன், எரியூட்டப்படுகின்றன.

இதற்கமைய மாதாந்தம் 45 மில்லியன் பிளாஸ்டிக் யோகட் கோப்பைகள் மற்றும் அதற்கு ஒத்த பிளாஸ்டிக் கோப்பைகள் சூழலில் சேர்க்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: