கொண்ட கொள்கையில் தடம்புரளாத தலைவர் டக்ளஸ் தேவானந்தா – பாஷையூர் கடற்றொழிலாளர்கள்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மை முகம் தற்போது வெளுக்கத் தொடங்கியுள்ளதை மக்கள் அனைவரும் உணர்ந்து கொள்ளத் தொடங்கியுள்ளனர் என பாஷையூர் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
எமக்கு வழங்கப்பட்ட பல்வேறு வகையான வாக்குறுதிகளை நம்பி நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்த நாம் அவர்களை வெற்றிபெறச் செய்தோம். எமது வாக்குகளை அபகரித்து வெற்றியை தமதாக்கிக்கொண்ட கூட்டமைப்பினர் தாம் வழங்கிய வாக்குறுதிகளையும், வாக்களித்த மக்களையும் மறந்து பதவி மயக்கங்களில் மூழ்கிப்போயுள்ள நிலையில் தமக்குள்ளேயே மோதிக்கொள்கின்றனர.; இதனால் மக்களாகிய நாம் தற்போது ஏமாளிகளாக்கப்பட்டுள்ளோம்.
அதுமட்டுமன்றி இன்றைய சூழ்நிலையில் ஒரு நிலையான ஸ்திரமான நிலையில் அவர்கள் இருப்பதாக நாம் உணரவில்லை. அந்தவகையில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மை முகம் தற்போது வெளுக்கத்தொடங்கியுள்ளதை நாம் மட்டுமல்ல எல்லா மக்களும் உணரத்தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கொண்ட கொள்கையில் சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் முகங்கொடுத்தபடி கடற்றொழிலாளர்களது பிரச்சினைகள் மட்டுமன்றி ஏனைய மக்களும் நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதில் அல்லும்பகலும் அர்ப்பணிப்புடன் உழைத்துக்கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தாவே என்றும் குறித்த பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
|
|