கை விரல் அடையாளம்  தொடர்பில் பொது நிர்வாக அமைச்சு விளக்கம்!

Wednesday, May 24th, 2017

சகல ஊழியர்களும் கடமைக்கு வரும் போதும், கடமை முடிந்து செல்கையிலும் விரல் அடையாளத்தை பதிவு செய்வதை கட்டாயமாக்க நேர்ந்தமை குறித்து பொது நிர்வாக அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.

இது 2009ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட சுற்றறிக்கையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்டதாகும். இது புதிய கட்டளை அல்லவென அமைச்சு அறிவித்துள்ளது.  ஒரு சில ஊடகங்கள் இதனை புதிய நடவடிக்கையாக சித்தரிக்க முயல்கின்றன. இந்த சித்தரிப்பு உண்மைக்கு புறம்பானதென அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டபிள்யு.டி.சோமதாச தெரிவித்துள்ளார்.

Related posts: