பண்டிகையை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட 05 நாட்கள்!
Saturday, April 13th, 2019
புத்தாண்டை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட வரும் சிறைக்கைதிகள் குடும்பங்களுக்காக இம்முறை 05 நாட்களை ஒதுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, இன்று முதல் 17 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட சிறைக்கைதிகள் குடும்பத்தினருக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் தமிழ் சிங்கள புத்தாண்டில் சிறைக்கைதிகள் குடும்பங்களுக்கு சிறைக்கைதிகளை பார்வையிட புத்தாண்டு தினம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
17 நள்ளிரவு முதல் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை!
அடுத்த ஆறு மாதங்களை இலக்காகக் கொண்ட பொருளாதார திட்டம் வகுக்கப்பட்டுள்ளது - மத்திய வங்கியின் ஆளுநர் அ...
பால் உற்பத்திக் குறைவால் மக்களின் புரதச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது - அகில இலங்கை கால்நடை உற்பத்தி...
|
|
|


