17 நள்ளிரவு முதல் பிரத்­தி­யேக வகுப்­பு­க­ளுக்கு தடை!

Sunday, August 14th, 2016

ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்­சைக்குத் தோற்றும் மாண­வர்­க­ளுக்­கான பிரத்­தி­யேக வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்­து­வ­தற்கு எதிர்­வரும் 17 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை­யான காலப்­ப­கு­தியில் தடை­செய்­யப்­பட்­டுள்ளதாக பரீட்­சைகள் திணைக்­களம் தெரிவித்துள்­ளது.

எதிர்­வரும் 21 ஆம் திகதி புல­மைப்­ப­ரிசில் பரீட்சை நடை­பெ­ற­வுள்­ளது. இத­னை­யிட்டே இத் தடைவிதிக்­கப்­பட்­டுள்­ளது. இதன்­படி பரீட்­சார்த்­தி­க­ளுக்கு பிரத்­தி­யேக வகுப்பு, கருத்­த­ரங்கு, விரிவுரை, பயிற்­சிப்­பட்­டறை, மாதிரி வினாத்­தாள்­களை அச்­சிட்டு விநி­யோ­கித்தல் மற்றும் பதாதைகள் ஒட்­டு­வது, துண்­டுப்­பி­ர­சு­ரங்­களை வழங்­கு­வது, தொலைக்­காட்சி வானொலி விளம்பரங்கள் ஆகி­ய­வற்­றுக்கு 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நடைபெறும் 21 ஆம் திகதிவரை தடைவிதிக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளது.

Related posts: