ஓய்வு பெற்றுச் செல்லும் ஊழியர்களுக்கு அரச செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த தடை – திறைசேரி அறிவிப்பு!

Sunday, November 27th, 2022

அரச அதிகாரிகள், ஓய்வு பெற்றுச் செல்லும்போது, அவர்களுக்கு அரசாங்கம் செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த திறைசேரி தடை விதித்துள்ளது.

செயலாளர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு சொந்தமான நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட சில மூத்த அரச ஊழியர்கள், அரச செலவில் பிரியாவிடை நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்கள் ஓய்வுநாளை அரசாங்க செலவில் கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

ஓய்வு பெறுபவர்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகள் மற்றும் மின்சார உபகரணங்கள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை அரசாங்க பணத்தைப் பயன்படுத்தி வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் அதற்கான தடையை திறைசேரி விதித்துள்ளது.

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 65 இலருந்து 60 ஆக மாற்றியமைக்கும் அரசாங்கத்தின் முடிவால் சுமார் 18,000 ஊழியர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஓய்வு பெறவுள்ளனர்.

இந்த நிலையில், திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன , கடந்த வெள்ளிக்கிழமை சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த சுற்றறிக்கையில் திறப்பு விழாக்கள், கடமைகளை பொறுப்பேற்கும் அதிகாரிகளின் செயல்பாடுகள், ஒன்றுகூடல் மற்றும் அதுபோன்ற நிகழ்வுகளுக்கு அரச பணத்தை பயன்படுத்தக்கூடாது என்று அவர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: