கடும் வறட்சி – 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023

வறட்சியினால் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

வறட்சியினால், குருநாகல் மாவட்டத்திற்கு உட்டபட்ட வயல் நிலங்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வறட்சியால் அந்த மாவட்டத்தில் 26 ஆயிரத்து 654 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, களுத்துறை, கொழும்பு, இரத்தினபுரி, கேகாலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, காலி, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழை மற்றும் காற்றினால் நாடளாவிய ரீதியில், 122 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: