27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானம்!

Tuesday, October 2nd, 2018

யாழ். மாவட்டத்தில் சுமார் 27,000 அன்னாசிப் பழக் கன்றுகளை பயனாளிகளுக்கு விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட செயலக விவசாய பிரிவு தெரிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில கடந்தவருடம் அன்னாசிப் பழ பயிச்செய்கை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் நடைபெற்ற கண்காணிப்புகளின் அடிப்படையில் சாவக்கச்சேரி கெற்பேலி பிரதேசத்தில் விவசாயிகள் அன்னாசி பயிர்ச்செய்கையில் ஆர்வம் காட்டியுள்ளனர். இங்கு விளைச்சலும் சிப்பாக அமைந்திருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு 41 பயனாளிகளுக்கு 27,000 அன்னாசி கன்றுகளை வழங்க தேசிய நல்லிணக்க அமைச்சு நிதி வழங்கியுள்ளதாக யாழ் மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு பரப்பில் சுமார் மூவாயிரம் கன்றுகள் வரைபயிரிடலாம் எனவும் அதனை ஒருவருடத்தில் அறுவடை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பயனாளிகளுக்கு கன்றுகள் வழங்கப்படுவதோடு இதற்கு தேவையான சொட்டு நீர்ப்பாசன முறையையும் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்.

Related posts: