அமெரிக்காவிடமிருந்து இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் வழங்கி வைப்பு!

Thursday, December 29th, 2022

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க இதனைக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ‘ஹார்ட் டூ ஹார்ட் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பினால் இந்த மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது.

இதன் பெறுமதி 7.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இது இலங்கை நாணய பெறுமதியில் 2.7 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ‘ஹார்ட் டூ ஹார்ட் இன்டர்நேஷனல்’ அமைப்பு, இலங்கைக்கு இதுவரையில்  19.9 மில்லியன் அமெரிக்க டொலர் (7.4 பில்லியன் ரூபா) பெறுமதியான நன்கொடைகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: