வடக்கில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தச் சிறப்புத் திட்டம்!

Wednesday, October 11th, 2017

வடக்கில் ஆரம்பக் கல்வியை மேம்படுத்தும் திட்டத்துக்கமைய சகல கோட்டங்களிலும் தலா இரண்டு பாடசாலைகள் மாதிரி ஆரம்பப் பாடசாலைகளாக மாற்றப்பட்டு அபிவிருத்தி செய்யப்படும் என வடக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் இரவீந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது –

கோட்டரீ தியாகத் தெரிவு செய்யப்படும் ஆரம்பப் பாடசாலைகள் சகல வசதிகளும் கொண்டவையாக அபிவிருத்தி செய்யப்படும். இதற்காக வடக்கின் 35 கோட்டங்களில் இருந்தும் 70 பாடசாலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாடசாலைகளில் சிறப்பு விளையாட்டு மைதானம், பொழுதுபோக்குக் கூடம் உள்ளிட்ட சகல வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும்.

இரண்டுமாடிக் கட்டடம் ஒன்றும் அமைக்கப்படும். 70 பாடசாலைகளில் 29 பாடசாலைகளில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அதே போன்று இந்த ஆண்டில் 25 புதிய கட்டடங்கள் அமைக்கப்படும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் பாடசாலைகளுள் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்றார்.

Related posts: