இலங்கையில் 2017 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதிமூலம் 480 கோடி ரூபா வருமானம்!

Saturday, March 10th, 2018

ஆடை உற்பத்தி மீள் ஏற்றுமதியின் மூலம் இந்த வருடம் இலங்கை கணிசமான ஏற்றுமதி வருவாயை பெறக்கூடும் என்று கூட்டு ஆடை உற்பத்தி சங்க அமைப்பின் தலைவர் ரியூலி குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் தைக்கப்பட்ட ஆடைகள் மற்றும் துணி வகைகள் தொடர்பான கண்காட்சியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு உரையாற்றினார்.

2017 ஆம் ஆண்டு தைக்கப்பட்ட ஆடை ஏற்றுமதி மூலம் 480 கோடி ரூபா வருமானம் கிடைத்தது. 2018ஆம் ஆண்டில் இதுவரை 45 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts:

கம்பஹாவில் தொடர்ந்தும் முடக்கநிலை: அரச மற்றும் தனியார் வங்கிகி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை திறக்க அ...
போர்ப் பயிற்சிகளை நடத்துவதற்காக ரஸ்யாவின் பிரமாண்டமான முன்று போர்க் கப்பல்கள் இலங்கை வருகை!
இந்தியாவை அடுத்து சீனாவிடமிருந்தும் இலங்கைக்கு வருகின்றது அரிசி - மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்காக உ...