குருநகர் இறங்குதுறையில் வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்பு!

யாழ். குருநகர் இறங்குதுறையில் இருந்து ரி.என்.ரி மற்றும் சி 4 வகை வெடிமருந்துகள் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
விசேட அதிரடிப் படைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நேற்று (14) இரவு குருநகர் இறங்குதுறைமுகத்தில் வைக்கப்பட்டிருந்த வலைக்குள் இருந்து ரி.என்.ரி. மற்றும் சி4 வகை 2 கிலோ 196 கிராம் நிறையுடைய வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெடிமருந்துகள் தொடர்பாக விசேட அதிரடிப் படையினர் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றதுடன், மீட்கப்பட்ட வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மீட்கப்பட்ட வெடிமருந்தினை யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்.நீதிமன்றில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
கடற்றொழில் அமைச்சின் அதிரடி!
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!
கொவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாட்டை தொடர்சியாக முடக்கி வைக்க முடியாது - இராஜாங்க அமைச்சர் அஜித்...
|
|