கடற்றொழில் அமைச்சின் அதிரடி!

Thursday, February 21st, 2019

கடற்றொழிலுக்கான அனுமதி பத்திரங்களை பெற்றுக்கொண்டு அதன் ஊடாக சட்டவிரோத செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற அனைத்து மீன்பிடி படகு செலுத்துனர்களுக்கும் மீண்டும் படகினை செலுத்த முடியாத வகையில் அனுமதி பத்திரத்தை இரத்து செய்வதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சு தீர்மானித்துள்ளது.

மீன்பிடி படகு உரிமையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த தடையை அமுல்ப்படுத்துவதற்கு தேவையான சட்டம் மற்றும் விதிமுறைகளை துரிதமாக பிறப்பிப்பதற்கு அவசியமான நடவடிக்கையை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு, மீன்பிடி படகுகளை பயன்படுத்தி சட்டவிரோத மனித கடத்தல் தொடர்பிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள கலந்துரையாடப்பட்டுள்ளது.

Related posts: