புதிய அறிகுறிகளோடு சிறுவர்களை தாக்கும் கொரோனா – எச்சரிக்கை விடுக்கும் பிரித்தானியா!

Wednesday, April 29th, 2020

பிரித்தானியாவில் கொரோனா தொடர்புடைய புதுவித அறிகுறியுடன் மருத்துவமனைகளின் தீவிர சிகிச்சைப்பிரிவுகளில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதாக என்.ஹெச்.எஸ் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அந்த எச்சரிக்கை கடிதத்தில், கொரோனாவுடன் தொடர்புடைய அறிகுறி ஒன்று (COVID-19 related inflammatory syndrome) பிரித்தானிய குழந்தைகளிடம் அதிகரித்துவருகிறது.

கடந்த மூன்று வாரங்களாக இத்தகைய அறிகுறிகளுடன் லண்டன் மற்றும் பிரித்தானியாவின் பிற பகுதிகளில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்படும் அனைத்து வயதினரான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது.

பொதுவாக, குழந்தைகள் கொரோனாவால் பெரிய அளவில் பாதிக்கப்படுவதில்லை என்ற கருத்து நிலவிவருகிறது.

உலகம் முழுவதிலுமே மிகக் குறைந்த எண்ணிக்கையிலான சிறுவர்களே உயிரிழந்திருக்கும் நிலையில், இந்த புதிய அறிகுறியுடன் சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: