திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Thursday, April 1st, 2021

திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

திண்மக்கழிவு முகாமைத்துவம் உலகின் பல நாடுகளுக்கும், இலங்கைக்கும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. அத்துடன் முறையாக முகாமைத்துவம் செய்யப்படாத திண்மக்கழிவுகள் காரணமாக சுற்றுச்சூழல் மற்றும் நீர் மாசடைதல் மற்றும் மண்ணில் பல்வேறு இரசாயனங்கள் சேர்தல் போன்ற பல பாதகமான விளைவுகள் ஏற்படுகின்றன.

இதனடிப்படையில் கழிவு முகாமைத்துவம் தொடர்பான சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த ஜூலை மாதம் பொறியியலாளர் ரொஹான் செனவிரத்ன தலைமையில் 14 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.

குறித்த குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையையெ ரொஹான் செனவிரத்ன ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, நிபுணர் குழு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்ததுடன் அறிக்கையின் பரிந்துரைகள் தொடர்பில் முழுமையானதொரு பின்தொடரல் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் கழிவு முகாமைத்துவத்தில் வெளி சுற்றுச்சூழல் காரணிகள் குறித்த அக்கறை இல்லாத காரணத்தினால் மக்கள் எதிர்ப்புகள் ஏற்படுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, கொசுக்கள் மற்றும் நுளம்புத் தொல்லையையும் துர்நாற்றம் ஏற்படுவதையும் இதனூடாக தடுப்பதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: