குடாநாட்டில் இருவாரங்களில் 311 பேருக்கு டெங்கு!

Thursday, December 21st, 2017

குடாநாட்டில் இந்த மாதத்தில் 13 ஆம் திகதி வரை 311 பேர் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர் என இனங்காணப்பட்டுள்ளனர் என யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகின்றது. யாழ்.மாவட்டத்திலேயே இம் முறை இது தீவிரமடைந்துள்ளது. இந்த வருடம் 6 ஆயிரம் பேருக்கு அதிகமானவர்கள் டெங்கு நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளனர். இது கடந்த வருடத்தை விட அதிகமாகும்.

கடந்த நவம்பர் மாதம் 480 பேர் டெங்கு நோய்த் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். அத்துடன் இந்த வருடம் நான்கு உயிரிழப்புக்களும் ஏற்பட்டுள்ளன.

ஏனைய மாவட்டங்களை விட யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த் தொற்று அதிகரித்துக் காணப்படுவதால் அந்த நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு விதமான செயற்திட்டங்கள் சுகாதாரத்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

விசேடமாக யாழ்ப்பாணம், சாவகச்சேரி, நல்லூர், கோப்பாய், உடுவில், சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி, பருத்தித்துறை, தெல்லிப்பழை ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நுளம்புகளின் பெருக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: