அரச நிறுவனங்களின் தலைவர்களிற்கு ஜனாதிபதி வழங்கிய உத்தரவு!

Tuesday, November 26th, 2019

அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நால்வர் அடங்கிய குழுவொன்றே நியமிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பிணையங்கள் மற்றும் பரிவர்தனை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் நாலக கொடஹேவா, ஜோன்ஸ் கீல்ஸ் ஹோல்டிங்ஸின் முன்னாள் தலைவர் சுசாந்தா ரத்நாயக்க மற்றும் மாஸ் ஹோல்டிங்ஸ் குழுவின் முன்னாள் தலைவர் டயன் கோம்ஸ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

ஜனாதிபதி அமைச்சரவை அமைச்சர்களுக்கு நியமனம் வழங்கும் போது அனைத்து அரச நிறுவங்களுக்கும் குற்றங்கள் சுமத்தப்படாத தகுதி உள்ள நபர்களை நியமிப்பதாக தெரிவித்திருந்தார்.

இதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என்றும், அமைச்சர்கள் அந்தந்த அரச நிறுவனத்திற்கும் பொருத்தமான நபர்களை பெயரிடலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

பதவி ஏற்ற பின் ஜனாதிபதி கோட்டாபய வழங்கிய கடுமையான உத்தரவு என்பது குறிப்பிடத் தக்கது.

Related posts: