கிளிநொச்சி முகாவில் பகுதியிலும் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதனால் அங்குரார்ப்பணம்!

Tuesday, July 6th, 2021

பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகாவில் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான வைரவநாதன் தவநாதனினால் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

சௌபாக்கியா வாரத்தை முன்னிட்டு நாடுமுழுவதுமம் குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் அடிப்படையில் ஜுலை தாதம் முதலாம் திகதிமுதல் ஏழாம் திகதிவரை குறித்த வாரம் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இன்றையதினம் முகாவில் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன், மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர் ஜெயராணி பரமோதயன், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீபாஸ்கரன், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கேதீஸ்வரன், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் மாலதி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்திலும் பல பகுதிகளில் குறித்த சமுர்த்தி சௌபாக்கியா திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இன்றையதினம் கல்வியங்காடு, திருநெல்வேலி, காண்டாவில் ஆகிய பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது பயனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவித்திட்டங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் குறித்த பிரதேசங்களின் பிரதேச செயலக அதிகாரிகள் சமுர்த்தி அதிகாரிகளுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக செயலாளர் அம்பலம் இரவீந்திரதாசனும் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு உதவித்திட்டங்களை வழங்கி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: