ஆபிரிக்க நாடுகளில் போஷாக்கு குறைபாட்டை நிவர்த்திக்க இலங்கை யோசனை முன்மொழிவு!

Tuesday, February 22nd, 2022

தென்னாபிரிக்காவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், தென்னாபிரிக்க நாடுகளில் போஷாக்குக் குறைபாட்டுக்குத் தீர்வாக பலா மரத்தை பயிரிடுவதற்கு ஆதரவாக யுனிசெப், உணவு மற்றும் விவசாய அமைப்பு ஆகியவற்றுக்கு கருத்துருவை சமர்ப்பித்துள்ளது.

இந்த அமைப்புகளுடன் பல சுற்றுக் கலந்துரை யாடல்களின் பின்னர், தென்னா பிரிக்கா விற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சிறிசேன அமரசேகர மற்றும் ஏனைய குழுவினர் பலா மரங்களை அந்நாடுகளுக்கு அறிமுகம் செய்வதில் கருத்திற்கொள்ள வேண்டிய அறிவியல் விடயங்களை விளக்கினர்.

இரண்டாம் உலகப் போரின் போது இலங்கையில் அவ்வப்போது ஏற்பட்ட உணவுப் பற்றாக் குறையைப் போக்க பலா மரம் உதவியதாகவும் உயர்ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

உணவுப் பற்றாக்குறை மற்றும் வறட்சி நிலவும் நாடுகளில் பலாப்பழத்தின் நுகர்வு பிரபலப்படுத் தப்பட்டால், உலக உணவுத் திட்டம் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு உணவு விநியோகச் செலவை பெருமளவு குறைக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த யோசனையை நடைமுறைப்படுத்த நிதியளிப்பு நிறுவனம் முன்வந்தால் தொழில்நுட்ப உதவி மற்றும் நடவுப் பொருட் களை இலங்கை வழங்க முடியும் என்றும் உயர்ஸ்தானிகர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: