எரிபொருள் நெருக்கடிக்கு மூல காரணம் உதயகம்மன்பில – வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு காஞ்சன விஜேசேகர எடுத்த நடவடிக்கை பாராட்டத்தக்கது – நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டு!

Friday, August 12th, 2022

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மூல காரணம் முன்னாள் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசம் குற்றம் சுமத்தியுள்ளார்.

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என அப்போதைய அமைச்சர் உதய கம்மன்பில கூறியதால், மக்கள் அதிகளவில் எரிபொருளை சேமிக்க வேண்டும் என்ற தூண்டுதலின் காரணமாகவே எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டதாக சாகர காரியவசம் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்

ஆனால் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க தற்போதைய எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.

நாட்டில் வளங்கள் இல்லாத வேளையில் வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு காஞ்சன விஜேசேகர எடுத்த நடவடிக்கையை பாராட்ட வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சாகர காரியவசம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: