சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, October 24th, 2023

ஒரு சில கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கைகள் காரணமாகவே சட்டவிரோத கடல்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் நெருக்கடி நிலமை தொடர்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கடற்படையினர் மற்றும் தொழிலாளர்களினாலும் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப்படுவதாகவும், இவ்வாறானவர்களின் செயற்பாடுகளை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்று காலை விஜயம் மேற்கொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மாவட்டத்தில் கடல்தொழில் அமைச்சினால் முன்னெடுக்கவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் கடல்தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடல்தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை  சந்தித்து விளக்கம் அளித்து கலந்துரையாடிய வேளையே அவர் மேற்கொண்டவாறு தெரிவித்திருந்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச அதிகாரிகள் சாக்குபோக்கு காரணங்கள் தெரிவிப்பதை விடுத்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நடைமுறையில் இருக்கின்ற சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வதே சிறந்த வழிமுறை எனவும் அவர் வலியுறுத்தி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: