தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறை மீது சுமத்திவிட நாம் தயாரில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 13th, 2016

பாரம்பரிய தமிழ் தலைவர்களான எஸ் .ஜெ.வி செல்வநாயகம்  மற்றும் ஜி.ஜி. பொன்னம்பலம் போன்றோர் எமது மக்களின் அரசியல் பிரச்சினைகளை தலைவர் அமிர்தலிங்கம் போன்றோரிடம்  விட்டு சென்றது போல்.

தலைவர் அமிர்தலிங்கம் போன்றோர் ஆயுதப்போராட்ட  தலைமைகளிடம் விட்டு சென்றது போல்.

நாமும் எமது மக்களின் அரசியல் பிரச்சினைகளை  அடுத்த சந்ததியிடம் சுமையாக சுமத்தி விட்டு செல்ல  நான் விரும்பவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுதிட்ட இறுதிநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் –

எமது சந்ததியின் காலத்திலேயே தமிழ் பேசும் மக்களின்  அரசியல் தலைவிதி மாற்றியமைக்கப்பட வேண்டும்

அதற்காக நான் தேர்தலுக்காகாக அன்றி எமது மக்களின்  உரிமையுள்ள தேசத்திற்காக சக தமிழ் கட்சிகளை நோக்கி நேசக்கரம் நீட்டுகிறேன்.

அரசாங்கத்தை நோக்கியும், அனைத்து தென்னிலங்கை  அரசியல் கட்சிகளை நோக்கியும்,…

முஸ்லிம், சிங்கள சகோதர மக்களை நோக்கியும் எனது  தோழமை கரங்களை நீட்டுகிறேன்.

தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்கு குரல் கொடுக்கும் நாம் தென்னிலங்கை மக்களின் பொருளாதார மீட்சிக்காகவும்  குரல் கொடுப்போம்!

நாம் இலங்கையர்கள் என்பதால் தமிழர் என்ற அடையாளத்தையோ  அன்றி தமிழர்கள் என்பதால் இலங்கையர்கள் என்ற அடையாளத்தையோ  ஒருபோதும் இழந்து விட தயாரில்லை.

ஒரு தேசிய இனத்தின் உரிமை என்பது இன்னொரு தேசிய இனத்தின்  உரிமைகைளை பறிப்பது என்பது அர்த்தமல்ல. மாறாக சமத்துவ உரிமையே சகல தேசிய இனங்களினதும் விடிவாகும் என தெரிவித்துள்ளார்.

Untitled-3 copy

Related posts:

உதயன் பத்திரிகை செய்தி பொய்யானது -தேர்தல் திணைக்களத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சிய முறைப்பாடு! (பிரதி ...
கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ந...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடித் துறைமுகங்கள் கூட்டுத்தாபனத்தின் பிரதான துறைமுக முகாமைத்துவ அத...