கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறை தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் ஆராய்வு!

Sunday, September 18th, 2022

கொக்குப்படையான் கடற்றொழில் இறங்குதுறையில் காணப்படும் தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது.

குறித்த இறங்குதுறைக்கு கடற்றொழில் அமைச்சர் இன்று கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு கூடியிருந்த கடற்றொழிலாளர்கள்,  கடலரிப்பை தடுப்பதற்கான கல்லணை ஒன்றினை அமைத்து தருமாறும், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக வாடி அமைப்பதற்கான காணியை ஒதுக்குதல் உட்பட்ட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்தனர்.

இவற்றுள் உடனடியாக தீர்வு காணக்கூடிய விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். ௲

000

Related posts:

எழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும் சட்டத்தை வடக்கிலும் அமுல்படுத்த வேண்டியது அவசியம் -  நாடாளு...
எரிபொருள் விலையேற்றத்தினால் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பல நாள் கலன்களின் உரிமையாளர்கள் அமை...
பகிரங்க விவாதத்துக்குப் அச்சமின்றி வாருங்கள் - தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுத்துள்ளார் அ...

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்...
யாழில் நவீன நண்டு கடலுணவு பதனிடும் தொழிற்சாலை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
புரவி புயலால் பேரழிவை சந்தித்த வடபகுதி மக்களுக்கு விஷேட இழப்பீடுகள் வழங்க அமைச்சர் டக்ளஸ் அமைச்சரவைய...