கிளிநொச்சி மாவட்ட கிராமசேவையாளர்களுக்கு எரிபொருள் வழங்க மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன நடவடிக்கை!

கிளிநொச்சி மாவட்ட கிராம சேவையாளர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இன்மை தொடர்பில் தம்மைச் சந்தித்த கிராமசேவையாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பரந்தனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தலா 3 லீற்றர் வீதம் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கான முயற்சிகளை எடுத்த மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மேலதிக இணைப்பாளர் கோடீஸ்வரன் றுஷாங்கன், உடனடி கவனமெடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எரிபொருள் வழங்க ஏற்பாடு செய்த மாவட்டச் செயலாளர் றூபவதி கேதீஸ்வரன் ஆகியோருக்கு கிராமசேவையாளர்கள் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்!
வடக்கில் மாபெரும் வர்த்தகக் கண்காட்சி ஆரம்பம்!
நாட்டின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரிப்பு - சுவாச நோயாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து...
|
|