கிளிநொச்சி மாவட்டத்திற்கு மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவை – பெற்றுத்தருவதாக அமைச்சர் டக்ளஸ் உறுதி – அமைச்சரின் இணைப்பாளர் தவநாதன் தெரிவிப்பு!

Tuesday, August 3rd, 2021

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கம் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்க தேவையாக உள்ள எஞ்சிய 15 ஆயிரதம் தடுப்பூசிகளையும் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநெச்சி மாவட்ட அமைப்பாளரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளர் தவநாதன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படும் நிலையங்களின் கள நிலமைகளை மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கனுடன் நேரில் சென்று கண்காணித்ததொடு நிலையங்களுக்கு பொறுப்பாகவுள்ள சுகாதார அதிகாரிகளிடம் களநிலமைகளை கேட்டறிந்ததன் பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலு; கூறுகையில் –

கிளிநொச்சி மாவட்டத்தில் கொவிட்-19 தடுப்பூசி வழங்கல் நடவடிக்கைகள் கடந்த 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

தெரிவுசெய்யப்பட்ட 9 நிலையங்களின் ஊடாக 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தொடர்ந்தும் 6 ஆவது நாளாக இன்றும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

கரைச்சி பிரதேச செயலக பிரிவில் கிளிநொச்சி மத்திய கல்லூரி, அக்கராயன் மத்திய கல்லூரி, உருத்திரபுரம் இந்துக் கல்லூரி, வட்டக்கச்சி மத்திய கல்லூரி ஆகியவற்றிலும்,  கண்டாவளை பிரதேச செயலக பிரிவில் தர்மபுரம் தர்மபுரம் மத்திய கல்லூரியிலும்,  பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் பளை மத்திய கல்லூரியிலும்,  பூநகரி பிரதேச செயலக பிரிவில் பூநகரி வைத்தியசாலை, வேரவில் வைத்தியசாலை மற்றும் முழங்காவில் வைத்தியசாலை ஆகியவற்றிலும் கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் மக்கள் குறித்த தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக தடுப்பூசிகளை மிகுந்த ஆர்வத்துடன் நிலையங்களுக்கு வருகைதந்து பெற்றுச் செல்வதை அவதானிக்க முடிகின்றது.

அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் 30 வயதுக்கு மேற்பட்ட மக்களின் தேவைக்கான மேலும் 15 ஆயிரம் தடுப்பூசிகள் தேவையாக உள்ளதாக சகாதார தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் அது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டசெல்லப்பட்ட நிலையில் குறித்த 15 ஆயிரம் தடுப்பூசிகளையும் விரைவில் பெற்றுத்தர நடவடிக்கை செய்வதாக அமைச்சர் உறுதியளித்தள்ளதாக தவநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.

முன்பதாக வடக்கு, கிழக்கு மக்களுக்கு வழங்கவென 16 இலட்சம் சீனோஃபாம் தடுப்பூசிகளை சீன அரசாங்கத்திடமிருந்து பெற்று கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கையளித்திருந்தார்.

வடக்கு மாகாணத்தில் 30 வயதுக்கு மேற்பட்ட 6 இலட்சத்து 57 ஆயிரத்து 547 பேர் உள்ள நிலையில் தற்போதுவரை 3 இலட்சத்து 67 ஆயிரத்து 240 பேருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்துகை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 50,000 தடுப்பூசிகள் கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: