கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டால் செல்லப் பிராணிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிருங்கள் – கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!

Sunday, June 20th, 2021

கொரோனா தொற்று உறுதியானர்கள் அல்லது அறிகுறிகள் தென்பட்டால் செல்லப் பிராணிகளுடன் தொடர்பு கொள்வதைத் தவிர்க்க வேண்டும் என கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது.

இலங்கையில் முதல் முறையாக விலங்கு ஒன்றிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் மனிதர்களில் இருந்தே விலங்குகளுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

எனவே வீட்டில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால், பிராணிகளுடன் குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்புகளைக் தவிர்ப்பது சிறந்ததாகும்.

எவ்வாறிருப்பினும், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதாக இதுவரையில் தகவல்கள் பதிவாகவில்லை.

எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.

முன்பதாக தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அண்மையில் சிங்கம் ஒன்றுக்கும், வரிக்குதிரை குட்டி ஒன்றுக்கும் கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில், தொற்றுறுதியான சிங்கத்தின் இணையான பெண் சிங்கத்திற்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், குறித்த சிங்கத்திற்கு எவ்வாறு கொவிட்-19 தொற்று உறுதியானது என்பது இதுவரையில் கண்டறியப்படவில்லை.

அந்த சிங்கத்தை பராமரித்த மிருகக்காட்சி சாலை உத்தியோகத்தர்களிடமிருந்து வைரஸ் பரவியதா என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக பேராதனை பல்கலைக்கழக மிருக வைத்திய பீடத்தின் விரிவுரையாளரான கலாநிதி டிலான் சத்தரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: