வடக்கின் கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழு!

Monday, February 11th, 2019

வட மாகாணத்தின் கல்வித்துறையில் குறைகேள் விசாரணைக் குழுவொன்றினை அமைப்பதற்கு ஆளுநர் சுரேன் ராகவன் தீர்மானித்துள்ளார்.

வட மாகாணத்தின் கல்வித்துறையில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது தொடர்பிலும் பால்நிலை சமத்துவம் இல்லாமை தொடர்பிலும் ஆளுநரின் கவனத்திற்கு அதிகளவான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குவதற்கு விசாரணைக் குழுவொன்றினை ஸ்தாபிக்க ஆளுநர் தீர்மானித்துள்ளார்.

மூன்று பேரடங்கிய குறித்த விசாரணைக் குழுவில் இரு பெண்கள் உள்ளடக்கப்படவுள்ளதுடன் அதில் ஒருவர் முறைப்பாட்டாளர்களினால் முன்மொழியப்பட்டவராகவும் இருப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடி...
பல்கலைக்கழக விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தாமல் ஒத்துழைப்பு வழங்குங்கள் - அமைச்சர் ஜீவன் தொண்டமான் வ...
வலி வடக்கு மக்களின் எதிர்பார்ப்புக்கள் -  ஈ.பி.டி.பியின் பிரதேச சபை உறுப்பினர்களுடன்  கலந்துரையாடல்!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து தூக்கிக் கொண்டு செல்வதை நிறுத்துங்கள் - பொலிஸ் மா அதிபர் அவசர உ...
மின்சாரம் வழங்கும் திறன் தங்களிடம் உள்ளது - மின்வெட்டு இடம்பெறாது கட்டணமும் அதிகரிக்காது – அமைச்சர்...
பண்டிகைக் காலத்தை கருத்தில்கொண்டு சுற்றிவளைப்பு நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது - பொலிஸார் தெர...