குருந்தூர் மலையில் அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Monday, April 3rd, 2023

குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளரும் ஊடக பேச்சாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் வெடுக்குநாறியில் எடுக்கப்பட்ட முடிவானது நிலையானதும் நிரந்தர இருப்புக்கானதுமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்’றை ஶ்ரீரங்கேஸ்வரன் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில் –

வெடுக்குநாறி தொடர்பில் நீதிமறத்தில் மூன்று வழக்குகள் நிலுவயைல் உள்ளது. அதேவேளை குருந்தூர் மலையில் விகாரை கட்டிய விடயம் அடாவடித்தனமானதாகும்.

இதேநேரம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையிலும் சந்தப்பட்டவர்களுடன் சமூகமான கலந்துரையாடல்களை மேற்கொள்வதன் ஊடாகவும் வெடுக்குநாறி விவகாரத்திற்கு விரைவில் நிரந்தர தீர்வு எட்டப்படும் என்று வெடுக்குநாறி மலையில் வைத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாம் சட்டத்துக்கு கட்டுப்பட்டே செயற்படுகின்றோம். அந்தவகையில் வெடுக்குநாறியில் தொடர்பாக கூறப்பட்ட கருத்து அல்லது எடுக்கப்பட்ட முடிவானது நிலையானதும் நிரந்தர இருப்புக்கானதுமாகும்.

அதேவேளை குருந்தூர் மலையில் விகாரை கட்டிய விடயம் அடாவடித்தனமானதும் நிலைத்து நிற்கமுடியாததுமாகும்.

குருந்தூர் மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அவர்கள் புத்த விகாரை கட்டியதற்காக வெடுக்கு நாறியில் நீதிமன்ற வழக்கை அவமதிக்க முடியாது. நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதற்கான பலாபலனை அவர்கள் விரைவில் அனுபவிக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை கறிப்பிடத்தக்கது.

0000

Related posts: