ஏப்ரல் 21 தாக்குதல்: 64 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

Saturday, August 31st, 2019


ஏப்ரல் 21  தாக்குதலின் பின்னர் தேசிய தௌஹீத் ஜமாத் இயக்கத்துடன் தொடர்புபட்டதாக கைதுசெய்யப்பட்ட 64 பேரின் விளக்கமறியல் எதிர்வரும் செப்டம்பர் 12ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

நுவரேலியாவில் உள்ள தேசிய தௌபீக் ஜமாத் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் மேற்கொள்ளப்பட்டுவரும் விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி. ரிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரையான விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்தார்.

Related posts:

ஆசிரியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு - மிக விரைவில் பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அ...
இலங்கை அரசின் இயற்கை விவசாய முயற்சிகளிற்கு ஆதரவளிப்பதற்காகவே நானோ நைட்டிரஜன் உரத்தை இந்திய வழங்கியுள...
நாட்டின் பல பாகங்களிலும் இன்று இடியுடன் கூடிய மழை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!