அரச தலைவர் மக்கள் சேவையின் கீழ் கிராமங்கள் தோறும் குறைகேள் படிவங்கள்!

Thursday, July 12th, 2018

அரச தலைவர் மக்கள் சேவையின் கீழ் பொது மக்களின் பிரச்சினைகளை இனங்காணும் படிவங்கள் கிராம மட்ட உத்தியோகத்தர்களால் கிராமங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

உத்தியோகபூர்வ பணி எனும் அரச தலைவர் மக்கள் பணி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் எட்டாவது நிகழ்ச்சியாக யாழ்ப்பாணத்தில் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனடிப்படையில் தற்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 435 கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் ஒவ்வொரு படிவம் வழங்கப்பட்டு வருகின்றன.

கிராம மட்ட அலுவலர்களான கிராம அலுவலர்கள், கிராம சமுர்த்திப் பணியாளர்கள், சமுர்த்திப் பணியாளர்கள் தத்தம் கிராம மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

படிவங்களில் ஆவணங்கள், காணிப் பிணக்குகள், வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினைகள் என ஏறக்குறைய 30 வரையான பிரச்சினைகள் தொடர்பில் கேட்கப்பட்டுள்ளன. மக்கள் தமக்குள்ள பிரச்சினைகளைக் குறிப்பிட்டு படிவங்களை தமது அலுவலர்களிடம் முடிந்தளவு விரைவில் ஒப்படைக்க வேண்டும். இதன்மூலம் மக்களின் பிரச்சினைகள் கண்டறியப்படும்.

இனங்காணப்படும் பிரச்சினைகள் பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்திலும் பிரதேச செயலக மட்;டத்திலும் தீர்த்து வைக்கப்படும்.

இங்கு தீர்க்கமுடியாத பிரச்சினைகள் மாவட்ட மட்டத்தில் இடம்பெறும் தேசிய நிகழ்ச்சியில் முழுமையாகத் தீர்த்து வைக்கப்படும். எனவே அனைத்துப் பொது மக்களும் இந்தப் படிவங்களை முழுமை செய்து கிராம மட்ட உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறு பிரதேச செயலகங்க@டாகப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts: