கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு – விவசாயிகள் கவலை!

புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. அத்துடன் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி புயலால் அழிவடைந்துள்ளன என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடும் மழை மற்றும் புயல் காரணமாக குழைகளுடன் வாழை மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும் பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைப் பயிர்ச்செய்கை பிரதேசமாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இராணுவத் தளபதி நேபாளம் விஜயம்!
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இன்று இலங்கை வருகை!
கிழக்கில் மின்சாரம் இன்றி தவிக்கும் 15,000 குடும்பங்கள் - ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!
|
|