இராணுவத் தளபதி நேபாளம் விஜயம்!

Wednesday, March 15th, 2017

5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா  நேபாளம் சென்றுள்ளார்.

இராணுவ கூட்டுப் படை தலைமை அதிகாரி பதவிக்கு 6 பேரின் பெயர் பரிந்துரைக்கப்பட்ட நிலையில், நியமனம் வழங்காமலேயே கிரிஷாந்த டி சில்வா நேபாளம் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

மேஜர் ஜெனரல் சானா குணதிலக்க, இந்த மாதம் 9ம் திகதி ஓய்வுப் பெற்றதை தொடர்ந்து இராணுவ கூட்டுப் படை தலைமை அதிகாரிபதவி வெற்றிடமாகவே உள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகளின் விபரங்களை பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பி வைக்குமாறு இராணுவத்தின் செயலாளர் மேஜர் ஜெனரல் பிரியந்த ஜயசூரியவிடம் கிரிஷாந்த டி சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னதாக இராணுவ கூட்டுப் படை தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஓய்வுப் பெற்றதை தொடர்ந்து, இராணுவத் தளபதி இந்தியா சென்றிருந்தார். பின்னர், குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் Ubhaya Medawala வை ஜனாதிபதி நியமித்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் அனர்த்தம் - இழப்பீடாக மேலும் 2.5 மில்லியன் டொலர்கள் - கடல்சார் சூழல் பாதுகா...
எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் - பொதுப் பயன்பாடுகள் ...
நான் ராஜபக்ஷக்களின் நண்பன் அல்ல - மக்களின் நண்பன் - மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த நான் ...