அரச வெசாக் விழா இம்முறை நயினாதீவில் – பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை கொண்டாட ஏற்பாடு செய்யுமாறு பிரதமர் அறிவுறுத்தல்!

Saturday, February 27th, 2021

2021 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்தராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

அதற்கமைய வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 65 விகாரைகள் மற்றும் 35 அறநெறி பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு அறிவித்துள்ளார்.

பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாக, பிற மதங்களுடன் இணைந்து அரச வெசாக் விழாவை ஏற்பாடு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை இம்முறை அரச வெசாக் விழாவின் விசேட அம்சமாகும்.

அச்செயற்பாட்டை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழுள்ள இந்து, கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் விவகார திணைக்களங்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

19 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் பலவீனமே ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் - அமைச்சர் ஜீ.எல்....
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கரங்களை பலப்படுத்த தயார் - நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தெரிவி...
அனைத்து நபர்களின் வாழ்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பொலிஸாருக்கு ...