கிழக்கில் மின்சாரம் இன்றி தவிக்கும் 15,000 குடும்பங்கள் – ஆளுநரின் அதிரடி நடவடிக்கை!

Wednesday, June 7th, 2023

கிழக்கு மாகாண இலங்கை மின்சார சபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் அதன் அதிகாரிகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விரிவான கலந்துரையாடலொன்றை நடத்தினார்.

கிழக்கு மாகாணத்தில் மின்சாரம் இன்றி 15,000 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு மின்சாரம் வழங்குவதற்கான பொறிமுறைகளை சமர்ப்பிக்குமாறும்  அதிகாரிகளுக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

மேலும் காற்றுமின்சாரம், சூரிய ஆற்றல், நீர்மின்சாரம் போன்ற புதுபிக்கத்தக்க ஆற்றல் வளங்களை  கொண்டு, முழுமையாக இயங்கக்கூடிய மின்சாரத்தை வழங்கும்  இலங்கையிலேயே முதல் மாகாணமாக கிழக்கு மாகாணத்தை  மாற்றுவதற்கான ஆய்வினை மேற்கொண்டு, அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறும்   மின்சார சபைக்கு ஆளுநர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: