விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்கள் 3,850 பேரை நியமிக்க நடவடிக்கை – கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, December 20th, 2016

நாடளாவிய ரீதியில் 3,850 விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொள்ளடு என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில், மாணவர்களிடையே விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, நாடளாவிய ரீதியில் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர் 3,850டீபரை நியமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் வெளியிடப்படும் அதன் பின்னர் இப்பதவிக்கு விண்ணப்பிக்கலாம் இதற்கு விண்ணப்பிப்போர் 35வயதுக்கு உட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். க.பொ.த சாதாரதரப் பரீட்சையில் 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஏதேனும் ஒரு விளையாட்டுப்போட்டியில், மாகாண தேசிய, சர்வதேச சான்றிதழ்களைப் பெற்றிருப்பதும் அவசியம். இத்தகமைகளைக் கொண்டிருப்போர் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

பதுளையிலுள்ள தேசிய கல்வியியற்கல்லூரி, விளையாட்டுக்கல்லூரியாக மாற்றப்பட்டவுள்ளது. மேற்படி பதவிகளுக்காக தெரிவு செய்யப்படும் 3,850 பேருக்கும் இந்தக்கல்வியறந் கல்லூரியிலேயே பயிற்சிகள் வழங்கப்பட்டதன் பின்னர், ஒவ்வொரு பாடசாலைக்கும் இருவர், என்ற ரீதியில் நியமிக்கப்படுவர். இவர்கள் காலை, மாலை என் இரு வேளைகளில் கடமையில் அமர்த்தப்படுவர். அவர்களுக்கு ரூ.30ஆயிரம் கொடுப்பனவு வழங்க தீர்மானிக்கப்பட்டுளளது. இதேவேளை எதிர்வரும் ஆண்டு, தமிழ்பாடசாலைகளி;ல் யோகா பயிற்சியையும் பாட திட்டத்தினுள் உள்வாங்குவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. – என்றார்.

Radha-Photo-1

Related posts: