மழைக்காலத்தில் வீட்டுத்திட்டங்கள் முடிக்காவிட்டால் நிதியை திருப்பி விடுவோம் – மிரட்டும் பிரதேச செயலகஅதிகாரிகள்!

Friday, October 25th, 2019


தற்போது நிலவி வரும் மழையுடனான காலநிலைக்கு மத்தியில்வழங்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டங்களால் பயனாளிகள் பல்வேறு அசௌகரிகங்களுக்கு உள்ளாகி வருவதாக கவலைவெளியிட்டுள்ளனர்.

வீட்டுத்திட்டங்களை மேற்பார்வை செய்யும் பிரதேச செயலகஅதிகாரிகள் நிதி திருப்பிவிடும் எனக் கூறி பயனாளிகளைஅவசரப்படுத்தும் நிலையில் மழை காலங்களில் வீடு கட்டுவதற்குத்தேவையான மணலைப் பெறுவதில் தாம் பல்வேறு சிரமங்களைஎதிர் நோக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படும் போது ஆரம்ப நிதி எதுவும் வழங்கப்படாத நிலையில் அத்திபாரம் வெட்டிக் காட்டிய பின்பே நிதி வழங்கப்படுகின்றது.

அதிகாரிகளின் நெருக்கடியால் தங்களிடம் இருக்கும் பணத்தைபணத்தை செலவு செய்து வீட்டுத்திட்டத்தை பூர்த்தி செய்தால்அரசாங்கத்தால் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை என அதிகாரிகள்கைவிரிப்பதாகவும் பயனாளிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். இருந்த வீட்டை இழந்த நிலையில் வீட்டுத்திட்ட வீட்டைஎதிர்பார்த்து வேலைகள் மேற்கொண்ட பலர் இன்னும் தமக்கான

முழுமையான நிதி கிடைக்கப் பெறாமல் கடன் சுமைக்குள் வாழவேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்பட்டனர். எனவே வீட்டுத்திட்டத்தை மேற்பார்வை செய்யும் அதிகாரிகள் தமது கடமையை முடித்து விட்டால் போதும் என்றில்லாது வீட்டுத்திட்டப் பயனாளிகளின் பிரச்சனை தொடர்பிலும் அக்கறை காட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related posts: