கிழக்கு மாகாண ஆளுநரால் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மாங்கன்றுகள் விநியோகம்!

Tuesday, July 20th, 2021

கோமரங்கடவல பிரதேச செயலகத்தின் 622 பயனாளிகளுக்கும் டொம்-ஜே.சி மாங்கன்றுகளை விநியோகிக்கும் திட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத்தின் ஆதரவின் கீழ் 14 ஆம் திகதி கோமரங்கடவல பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்தால் இதுவரை 15,ஆயிரம் டொம்-ஜே.சி மா மரகன்றுகள் பெறப்பட்டுள்ளன. மா சாகுபடிக்கான பயனாளிகள் ஏற்கனவே உள்ளூர் மட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சுகாதார அறிவுறுத்தல்களின்படி, மாங்கன்றுகள் விநியோகிக்க ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வரவழைக்கப்பட்டனர். சாகுபடிக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு சம்பந்தப்பட்ட அலுவலகங்களால் வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு கரிம உரங்களைப் பயன்படுத்தி பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுமார் மூன்றரை ஆண்டுகளில் அறுவடை செய்ய கூடியதான இந்த மாமரக் கன்றுகள் வெற்றிகரமாக பயிரிடும் பயனாளிகளுக்கு எதிர்காலத்திலும் தேவையான மாங்கன்றுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: