அரசில் இருந்து விலகுவேன் – அர்ஜுன ரணதுங்க!

Saturday, July 8th, 2017

இந்த நாட்டில் பௌத்த மதத்திற்கு உரிய இடம் வழங்கப்படாவிட்டால் அரசில் தொடர்ந்து இருக்கப்போவதில்லையென அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பால் பௌத்த மதம் இந்த நாட்டில் வகித்து வரும் இடத்திற்கு பங்கம் எதுவும் ஏற்படுமா? என்று ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

புதிய அரசியலமைப்புத் திட்டத்தால் பௌத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்படுமென நாங்கள் எந்த இடத்திலும் கூறவில்லை. அவ்வாறு கூறப்போவதும் இல்லை.இந்த அரசின் அமைச்சர்களில் ஒருவன் என்ற வகையில் இதை எனக்கு உறுதியாகக் கூறமுடியும். எனினும், ஒருசில அரசியல்வாதிகள் இந்த விடயத்தை திரிபுபடுத்தி குழப்பங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

புதிய அரசியலமைப்புத் திட்டத்தால் பௌத்த மதம் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுமென பீதியைக் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.இவர்களது பொய்ப்பிரசாரங்கள் முற்றிலும் அரசியல் சம்பந்தப்பட்டவை. பௌத்த மதத்தைக் காப்பாற்ற முயற்சி செய்யும் நாங்கள் ஏனைய மதங்களுக்குரிய உரிமையையும், அந்தஸ்தையும் நிச்சயம் வழங்குவோம். இந்த நாடு சகல இனத்தவருக்கும், சகல மதத்தவருக்கும் சொந்தம் என்பதே எங்களது ஆணித்தரமான கொள்கை. அதிலிருந்து ஒருபோதும் தவறமாட்டோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts:

உள்ளூராட்சி பிரதானிகளை எச்சரிக்கும் அமைச்சர் - பொது நிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் !
அரச வைத்தியசாலைகளில் குவிந்து கிடக்கும் அடையாளம் தெரியாத சடலங்கள் - பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளவத...
காசா மீது அணுவாயுதங்களை வீசுவதும் ஒரு சாத்தியக்கூறு என தெரிவித்த இஸ்ரேலிய அமைச்சர் அமைச்சரவையிலிருந்...