கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்!
Thursday, February 22nd, 2018
கிளிநொச்சியில் இளைஞர் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி உதயநகர் பிரதேசத்தை சேர்ந்த முச்சக்கர வண்டி உரிமையாளரான 25 வயதான ப.டனுசன் என்ற இளைஞரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.
இவர் நேற்றைய தினம் கிளிநொச்சியிலிருந்து, கிளிநொச்சி மேற்கு நோக்கி சென்ற போதே காணாமல் போனதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் புதுமுறிப்புக்குளத்திலிருந்து குறித்த இளைஞரின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா, கொலையா என என்பது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Related posts:
இலங்கை வந்தடைந்தார் இரினா பொகோவா !
பொதுத் தேர்தலின் பின் ஜனாதிபதித் தேர்தல் – ஜனாதிபதி!
20 ஆவது திருத்த்திலுள்ள அரசியலமைப்புக்கு முரணாக விடயங்கள் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டு...
|
|
|


