வடக்கில் செப்ரெம்பர் மாதத்தில் கொரோனா தொற்றினால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிப்பு – சுகாதார திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 2nd, 2021

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் கோவிட்-19 நோய்த் தொற்றினால் 9 ஆயிரத்து 337 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 348 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் முதலாம் திகதியான நேற்று வடக்கு மாகாணத்தில் 78 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நால்வர் கோவிட்-19 நோயினால் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் செப்ரெம்பர் மாதத்தில் அதிகப்படியாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 3 ஆயிரத்து 776 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 152 பேர் உயிரிழந்துள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 467 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 130 பேர் உயிரிழந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 986 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன், 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 672 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் 436  தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளதுடன் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

2020 மார்ச் மாதம் முதல் நேற்று ஒக்டோபர் முதலாம் திகதிவரையான 18 மாதங்களில் வடக்கு மாகாணத்தில் 36 ஆயிரத்து 584 பேர் கோரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 761 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மட்டும் 16 ஆயிரத்து 852 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதுடன் 413 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: