பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!
Sunday, April 29th, 2018
யாழ் நகரில் உள்ள சில வர்த்தக நிலையங்களில் பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாதைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் மற்றும் விளம்பரப் பலகைகளை அகற்றி மக்களின் சிரமங்களை நீக்க ஒத்துழைப்பு வழங்குமாறும் யாழ் மாவட்ட போக்குவரத்துப் பொலிஸார் யாழ் வணிகர் கழகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந் நடவடிக்கைகளிலிருந்து தவறும் வர்த்தகர்களின் பொருள்கள் மற்றும் விளம்பரப் பலகைகள் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்படுவதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
எனவே இது தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் கூடிய கவனம் எடுத்து தங்கள் விற்பனை பொருள்களையும் விளம்பரப் பலகைகளையும் அகற்றி ஒத்துழைப்பு வழங்கும்படி யாழ் வணிகர் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
Related posts:
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க கோவை சட்டமூலம் !
போக்குவரத்து கட்டுப்பாடுகள் 19 , 20 ஆம் திகதிகளின் நிலைமைகளை மீளாய்வு செய்தே தீர்மானிக்கப்படும் - அ...
அடாவடியாக செயற்படுகின்றது யாழ் மாநகரசபை - யாழ்ப்பாண வணிகர் கழகம் குற்றச்சாட்டு!
|
|
|
இழப்புகள் அர்த்தமுள்ள வகையில் அரசியலாக்கப்பட வேண்டும் - ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத...
ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சட்டமூலம் சட்ட மா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என நீதி அமைச்சர் விஜேதா...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தீர்மானித்தப்படி நடத்துவதால் 5 இலட்சம் இளைஞர்களின் வாக்குரிமை இழக்கப்படும...


