காங்கேசன்துறையருகே சூறாவளி மையம்!

Thursday, May 19th, 2016

காங்கேசன் துறைக்கு வடக்கே  500 கிலோ மீற்றர்  தொலைவில்  பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது.

இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார்.

இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றது.மேலும் மத்திய மற்றும் வடபகுதிகள் பெரிதும் பாதிக்ககப்படுமென அவர் தெரிவித்தார்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் பாரிய அலைகள் தோன்றக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதால் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


அரசியல் அரங்கில் தமிழ் சக்திகளை ஒன்றிணைக்கும் செயற்பாடுகளுக்கு ஈ.பி.டி.பி தொடர்ந்தும் வலுச்சேர்க்கும...
இந்தியாவினால் வழங்கப்படும் நிதியுதவி தொடர்பிலான ஒப்பந்தங்களை நிறைவுசெய்வதற்கு நிதியமைச்சர் பஷில் மீண...
கடன் மறுசீரமைப்பு திட்டம் ஆய்வு செய்யப்படுகிறது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!