கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்துவது அவசியம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டு!
Thursday, October 14th, 2021
கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
பட்டப்படிப்பினை நிறைவு செய்யும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்துறை மாணவர்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும இது தொடர்பான பரிந்துரைகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் கருத்துகளுக்காகப் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
உணவு கையாளும் நிலையத்தில் வெற்றிலை மென்று ஜம்பருடன் நின்றவருக்கு ரூபா 3 ஆயிரம் தண்டம்!
திங்கள்முதல் தனியார் தொழில்துறைகளை ஆரம்பிக்க இணக்கம் - அமைச்சர் தினேஷ் குணவர்தன!
1000 ரூபா கொடுப்பனவு நடைமுறை விவகாரம் 5 ஆம் திகதிமுதல் நடைமுறையில் - தொழில் ஆணையாளர்!
|
|
|
தனிநபர் சுயவிருப்பங்களுக்காக கூட்டப்படும் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களால் மக்களுக்கான விமோசனங்கள் ...
இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்கிவரும் தொல்லியல் திணைக்களத்தின் பணிப்பாளர் பதவி நீக்கப்பட வேண்ட...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம் – பாடசாலைகளுக்கான இ...


