திங்கள்முதல் தனியார் தொழில்துறைகளை ஆரம்பிக்க இணக்கம் – அமைச்சர் தினேஷ் குணவர்தன!

Friday, May 8th, 2020

சுகாதார வழிமுறைகளை பின்பன்றி தனியார் நிறுவனங்களை திறப்பதற்கு அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் நியமிக்கப்பட்ட சிறப்பு முத்தரப்பு பணிக்குழு இணக்கம் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து நாட்டில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும் எதிர்வரும் 11 ஆம் திகதிமுதல் திறப்பதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

பணிக்குழுவின் பிரதிநிதிகள், இலங்கை முதலாளிகள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சில் நடைபெற்ற சந்திதிப்பின் பின்னரே இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது..

அனைத்து ஊழியர்களுக்கும் வேலை பாதுகாப்பை உறுதி செய்வதே அரசாங்கத்தின் கொள்கை என அமைச்சர் இதன் போது வலியுறுத்தினார்.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக எந்த ஊழியரையும் நீக்க கூடாதென என முடிவு செய்யப்பட்டது. சமூக தூரத்தை பாதுகாக்கும் அதே நேரத்தில் நிறுவனத்தின் கடமைகளைச் செய்யவும், சேவை மாற்றத்தை தேவைக்கேற்ப பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

சேவை காலத்திற்கு சேவை ஒப்பந்தங்களின்படி செலுத்த வேண்டிய பரிந்துரைக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் சம்பளத்தை செலுத்துதல், அடிப்படை சம்பளத்தில் 50% அல்லது 14500 ரூபாய் செலுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் EPF மற்றும் ETF பணத்தை உரிய முறையில் வைப்பிட தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: