ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பம் – பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை!

Thursday, October 26th, 2023

அண்மையில் இடம்பெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் 434 மத்திய நிலையங்களில் குறித்த விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது, தென் மாகாணத்தில் தவணைப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் உள்ள பரீட்சார்த்திகளின் விடைத்தாள் திருத்தப்பணிகள் நாளை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தப்பணிகள் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெற உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் 2023ம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை (27) வழங்கப்படவுள்ளது.

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைத் தேர்வை தனியார் சாரதி பயிற்சிப் பாடசாலைகள் ஊடாக நடத்து...
பசும்பால் தேவையை பூர்த்தி செய்வதற்கு நீண்டகால திட்டமொன்றை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...
வழித்தட அனுமதியின்றி பயணித்த 25 பேருந்துகள் பறிமுதல் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தகவல்!