கன மழை – கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!
Friday, July 19th, 2019
மலையகத்தில் நிலவும் காலநிலை சீரின்மை காரணமாக பெய்து வரும் அடை மழையினால் மேல் கொத்மலை நீர்தேக்க பகுதியின் நீர்மட்டம் உயர்வடைந்ததால் 5 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்தோடு மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறந்து விடப்பட்டதன் காரணமாக சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிட்டதக்கது.
Related posts:
இலங்கையுடன் திறந்த வான் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட இந்தியா தீர்மானம்!
வாக்காளர் அட்டைகள் விநியோகப் பணிகள் 68 வீதம் நிறைவு - தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் காப்புறுதி நிறுவனம் 715 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க இணக்கம் - சட்டமா அ...
|
|
|


