கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு – வர்த்தமானி அறிக்கை வெளியீடு!
Friday, February 17th, 2017
கண் வில்லைகளுக்கான விலை குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிக்கை இன்று வெளியிடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், 30 ஆயிரம் ரூபாவுக்கு இருந்த கண் வில்லைகள் ஒன்றில் விலை எட்டாயிரம் ரூபா வரை குறைவடையும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். பாணந்துறை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்
அரச மருத்துவமனைகளில் வருடமொன்றுக்கு சுமார் ஒரு இலட்சம் கண் வில்லைகள் விநியோகிக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:
பாகுபாடற்ற சமூகத்தை கட்டியெழுப்பு வதனூடாகவே சமூகங்களில் மாற்றங்களை உருவாக்கமுடியும் - ஈ.பி.டி. பியின...
இயற்கை அனர்த்தங்களால் வருடாந்நம் 380 மில்லியன் டொலர் இலங்கைக்கு இழப்பு!
சிறைச்சாலை கொத்தணியால் பாதிக்கப்பட்ட நிலையில் 19 பேர் பலி!
|
|
|


