பாகுபாடற்ற சமூகத்தை கட்டியெழுப்பு வதனூடாகவே சமூகங்களில் மாற்றங்களை உருவாக்கமுடியும் – ஈ.பி.டி. பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Thursday, February 16th, 2017

பாகுபாடற்ற சமதர்ம சமூகத்தை கட்டியெழுப்புவதூடாகவே எமது சமூகத்தில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பிரதேச அலுவலகத்தில் இடம்பெற்ற பிரதேசத்தின் வட்டார செயலாளர் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

புரையோடிப்போயுள்ள சமூக வேறுபாடுகள் காரணமாக மக்கள் வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் மேம்பட முடியாத நிலை மிகவும் கவலையளிக்கும் விடயமாகும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் எமது கட்சி இன,மத,மொழி பேதங்குளுக்கு அப்பால் எமது சமூகத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து முன்னேற்றங்களை காணவேண்டும் என்பதில் தெளிவான நிலைப்பாட்டுடன் செயற்பட்டு வருகின்றது.

இன்றைய கால மாற்றத்திலும் நாம் கட்சியின் கொள்கை வழி நடந்து சமதர்ம சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பதில் அக்கறையுடன் உழைத்து வருகின்றோம்.

அதற்கு அடித்தளமாகவே நாம் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின்  நெறிப்படுத்தலுடன் கிராம, பிரதேச, மாவட்ட மட்டங்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி அதனூடாக ஒரு ஏற்றத்தையும் ஒரு மேம்பாட்டையும் காண முடியும் என திடமாக நம்புகின்றோம்.

வட்டுக்கோட்டை பிரதேச நிர்வாக செயலாளர் செல்வக்குமார் தலைமையில் நடைபெற்ற இச்சந்திப்பின் போது கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாகச் செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு பாலகிருஸ்ணன்  கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஜயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன், கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், கட்சியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன்,உடனிருந்தனர்.

h

Related posts: