கண்ணீரை வைத்து பிழைப்பு நடத்துவதை ஊடகங்கள் கைவிட வேண்டும் – தகவல் திணைக்களப் பணிப்பாளர்!

கண்ணீரையும் சடலத்தையும் வைத்து பிழைப்பு நடத்துவதை ஊடகங்கள் கைவிட வேண்டும். சில ஊடகங்கள் ஊடக ஒழுங்குமுறையை மீறி செயற்படுவதால் சுதந்திர ஊடக ஒழுங்குபடுத்தல் முறையொன்றை கொண்டு வருவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களப் பணிப்பாளர் ரங்க கலன்சூரிய தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் செயற்பாடுகளில் தலையீடு செய்ய அரசாங்கம் தயாரில்லை என்று குறிப்பிட்ட அவர் ஒழுங்குபடுத்தல் முறையொன்றை அறிமுகம் செய்யும் வரை ஊடகங்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.
ஊடக ஒழுங்குபடுத்தல் முறையொன்றை அரசாங்கம் கொண்டுவர உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர் ஊடகங்களை கடடுப்படுத்த எதுவித ஒழுங்குபடுத்தல் முறையும் கொண்டு வரப்படவில்லை. அரச ஊடகங்கள் அடங்கலாக சில ஊடகங்கள் ஊடக ஒழுங்குகளை மீறி செய்தி வெளியிடுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகள் தற்கொலையை காண்பித்து வருகின்றன.
சடலத்தையும் கண்ணீரையும் வைத்துப் பிழைப்பு நடத்தும் நிலை நிறுத்தப்பட வேண்டும். குறைந்த பட்ச சட்டங்களையாவது ஊடகங்கள் பின்பற்ற வேண்டும். ஊடகங்களுக் கிடையிலான போட்டி உக்கிரமாக உள்ளதால் இவ்வாறு ஊடக ஒழுங்குகள் மீறப்படுகின்றன.
Related posts:
|
|